சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த காவல்துறை திருத்தச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றபட்டுள்ளது. அதன்படி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம், ஏற்காட்டில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும். கோவை மாநகராட்சியை விபத்தில்லா மாநகராட்சியாக மாற்ற ₹5 கோடியில் செயல்திட்டம் செயல்படுத்தப்படும். மக்களைக் காக்கும் காவல்துறை, தீயணைப்புத்துறையின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தரப்படும். 201 புதிய காவல் குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.