BSC கணித பட்டப்படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் கடந்த ஆண்டு 10 கலை அறிவியல் கல்லூரிகள் அந்த பிரிவை நீக்கின. 2023 ஆம் ஆண்டில் அந்த படிப்பில் ஒரு லட்சம் பேர் சேர்ந்த நிலையில் இந்த ஆண்டு 70 ஆயிரம் பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதனால் இந்த பிரிவில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் மற்றும் டேட்டா சயின்ஸ் பாடங்களை சேர்க்க கல்லூரி கல்வி இயக்குனரகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.