பிஎஸ்எஃப் இயக்குநர் ஜெனரல் நிதின் அகர்வால் மற்றும் துணை சிறப்பு இயக்குநர் ஜெனரல் ஒய்பி குரானியா ஆகியோரை மத்திய அரசு நேற்று பதவியில் இருந்து விடுவித்து அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பியது. அகர்வால் 1989 பேட்ச் கேரளா கேடர் அதிகாரி, குரானியா 1990 பேட்ச் ஒடிசா கேடர் அதிகாரி ஆவர். இந்த இருவரையும் நீக்கி அமைச்சரவையின் நியமனக் குழு சிறப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்வதேச எல்லையில் ஊடுருவல் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.