விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு பட்ஜெட்டில் ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதிக விளைச்சல் தரக்கூடிய, அனைத்து பருவத்துக்கும் ஏற்ற புதிய 109 பயிர்களின் விதைகள், 32 பிற விதைகள் விவசாயத்துக்காக விரைவில் விடுவிக்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகள், இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவது ஊக்குவிக்கப்படும் என்றார்.