பட்ஜெட் தினமான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் எந்தவித பெரிய மாற்றமும் இல்லாமல் நிறைவு பெற்றுள்ளன. இன்று காலை 24,559 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கிய நிஃப்டி, பட்ஜெட் தொடர் வாசிக்கத் தொடங்கியவுடன் சுமார் 420 புள்ளிகளை இழந்து 24,140 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. பின்னர், 2 மணியளவில் மீண்டுவந்த பங்குச்சந்தை, வர்த்தக நேர முடிவில் நேற்றை விட 30 புள்ளிகள் மட்டுமே இழந்து 24,479 புள்ளிகளில் நிறைவடைந்தது.