நாடாளுமன்றத்தில் இன்று 2024-2025ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். வழக்கமாக, பொது பட்ஜெட்டுடன் ரயில்வே குறித்த அறிவிப்புகளும் வெளியாகும். ஆனால் இந்த முறை பட்ஜெட்டில் ரயில்வே குறித்த எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதனால் ரயில்வே குறித்த அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.