2024-25ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 86 நிமிடங்களுக்கு வாசித்தார். இதில் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் மீதான குறுகிய கால மூலதன ஆதாய வரி (STCG) 15%இல் இருந்து 20%ஆகவும், நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCG) 10%இல் இருந்து 12.5%ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பங்கு வர்த்தகம் செய்பவர்கள் மற்றும் நீண்ட கால அளவிற்கு முதலீடு செய்துள்ளவர்களின் லாபம் கணிசமாக குறையும். நீண்ட கால முதலீட்டாளர்கள் லாபத்தில் ஆண்டுக்கு 1.25 லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை.