2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட் 9 அம்சங்களை முன்னிறுத்தி தாக்கல் செய்யப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதன்படி விவசாய உற்பத்தித்திறன் *வேலைவாய்ப்பு மற்றும் திறன் *மேம்பட்ட மனித வளம், சமூக நீதி *உற்பத்தி மற்றும் சேவைகள் *நகர்ப்புற வளர்ச்சி *ஆற்றல் பாதுகாப்பு உள்கட்டமைப்பு *புதுமை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு *அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்.
ஊரக பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகளுக்காக 2.66 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோருக்கான முத்ரா யோஜன திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.