மத்திய ஆயுதப்படை (சிஏபிஎஃப்) மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் 84,106 பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அறிவித்துள்ளார். மாநிலங்களவையில் விவரங்களை வெளியிட்ட அவர், சிஏபிஎஃப் மற்றும் அசாம் ரைபிள்ஸில் 84,106 பணியிடங்கள் காலியாக உள்ளன. இரு படைகளிலும் இந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி நிலவரப்படி 84,000 பணியிடங்கள் காலியாக உள்ளது. 64,091 பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்..