தன்னுடைய குழந்தையை CBSE பள்ளியில் சேர்க்க முடியாததால் தாய் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் தனது குழந்தையை CBSE பள்ளியில் சேர்க்க பணம் இல்லாததால் மகளுடன் சேர்த்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாலேகான் பகுதியில் வசித்து வந்த பாக்யஸ்ரீ (26), தனது மகள் ஷமிக்ஷாவுடன் (5) கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், கணவருக்கு வீடியோ கால் செய்து, கடைசியாக குழந்தையை பார்த்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.