நாடு முழுவதும் சி என் ஜி கேஸ் விலையை கிலோ கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாநில வரிகளோடு சேர்த்து நேற்று முதல் கிலோ கிராமுக்கு ஒரு ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் சிஎன்ஜி கேஸ் விலை 74.09 ரூபாயிலிருந்து 75.09 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் எதிரொளியாக சிஎன்ஜி மூலம் இயங்கும் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஆகிய வாகனங்களின் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது