ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் e-KYC சரி பார்ப்பை முடிக்க வேண்டியது கட்டாயமாகப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் சரிபார்ப்பை முடிக்காதவர்களின் ரேஷன் கார்டுகள் நீக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடி அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பயனாளிகள் அருகில் உள்ள பொது விநியோக முறை விற்பனையாளர்களிடம் சென்று கேஒய்சி அப்டேட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.