கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதட்டத்தை ஏற்படுத்தும் வகையிலும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார்.
இந்த மோசமான அரசியலை அவர் கையிலெடுத்துள்ளார். பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு போதுமான சிகிச்சைகளை மருத்துவர்கள் தொடர்ந்து சிறப்பாக வழங்கி வருகின்றனர் என்றார்.