FASTag சேவைகளில் வருகின்ற ஆகஸ்ட் 1 முதல் புதிய விதி அமலுக்கு வருகிறது. வாகனம் வாங்கிய 90 நாட்களுக்குள் வாகனப் பதிவு எண் FASTAG எண்ணில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இல்லையெனில் அது ஹிட்லிஸ்ட்டில் இருக்கும். நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஜூன் மாதம் FASTAG-க்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. FASTAG சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 31 வரை அவகாசம் உள்ளது.