கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலமோசடி தொடர்பான வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வந்தார். இதுதொடர்பாக முன்ஜாமின் கோரிய விஜயபாஸ்கரின் மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், கவுண்டம்பாளையம் தோட்டக்குறிச்சி உள்ளிட்ட இடங்களிலுள்ள விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.