விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு அடுத்த மாதம் 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளை மேற்பார்வையிட 3 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அமித் சிங் பன்சால், மணிஷ்குமார் மீனா, அஜய்குமார் பாண்டே ஆகியோரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 04146221950, 04146223265 என்ற எண்களில் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.