நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்க இருக்கிறது. முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டியளித்த பிரதமர் மோடி, “புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பிக்களையும் வரவேற்கிறேன்.
எங்களின் நோக்கம், செயல்பாடு ஆகியவற்றை மதிப்பிட்டே 60 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கு மக்கள் வாய்ப்பு அளித்துள்ளனர். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம்” என்றார்.