தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இடஒதுக்கீட்டுக்கான சிறப்பு பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது. விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்பு பிரிவினரை தொடர்ந்து ஜூலை 29இல் பொதுக் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 433 கல்லூரிகளில் உள்ள 2.33 லட்சம் இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.