GPay, Phonepe உள்ளிட்ட UPI செயலிகளின் பயன்பாடு தற்போது அதிகரித்து காணப்படும் நிலையில்,மோசடிகளும் அதிகரித்துள்ளன. உங்கள் GPayக்கு தவறுதலாக பணம் அனுப்பி விட்டதாக கூறி, அதனை திரும்ப அனுப்ப கூறுவர், அப்படி திருப்பி அனுப்பும் போது வங்கி கணக்கில் இருந்து மொத்த பணமும் திருடு போகிறது. அதனால், தவறுதலாக பணம் அனுப்பினால் அதனை Gpay மூலம் திருப்பி அனுப்பாமல், காவல் நிலையத்தில் வாங்கிக் கொள்ள அறிவுறுத்தவும்.