GST வரி முறையை எளிதாக்கும் வகையில், வருங்காலத்தில் அதன் கட்டண அடுக்குகளை (ஸ்லாப்) 4லிருந்து 3ஆகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து பேசிய CBIC தலைவர் சஞ்சய் அகர்வால், GST இல் உள்ள பல விகிதங்களும் வகைப்பாடுகளும் சர்ச்சைகளை ஏற்படுத்துவதால் அரசு அதனை மாற்றியமைக்க உள்ளதாகக் கூறினார். தற்போது 5%, 12%, 18% & 28% என்ற 4 வகை விகிதங்கள் GST வரி விதிப்பில் நடைமுறையில் உள்ளன.