25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் நேத்ரன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது மகள் அபிநயா தெரிவித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியின் ‘ரஞ்சிதமே’ சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நேத்ரனுக்கு தீபா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். தற்போது, புற்றுநோய் அறுவை சிகிச்சை நிறைவடைந்த நிலையில் கல்லீரல் பாதிப்பும் இருப்பதால் நேத்ரன் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.