தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள், ஒரு டெஸ்ட் மற்றும் 3டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் இன்று மதியம் 1:30 மணிக்கு இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. டி20 போட்டிகளுக்கு தயாராகும் வகையில் இந்த போட்டிகளை பயன்படுத்திக் கொள்வோம் என இந்திய அணியின் கேப்டன் ஹெர்மன் பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.