இந்தியன் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தெரியாத whatsapp எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் இந்தியன் வங்கி பெயரில் போலியாக வரும் லிங்குகளை நம்பி கிளிக் செய்ய வேண்டாம். செயலி, கோப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அப்படி செய்வதால் தகவல்கள் திருடு போக வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. அதனைப் போலவே லிங்குகள், செயலி மற்றும் கோப்புகளை இந்தியன் வங்கி அனுப்புவதில்லை எனவும் கூறியுள்ளது.