ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் வருகிற 12ஆம் தேதி வெளியாக உள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படத்தின் புரோமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு படத்தின் டிரெய்லர் மற்றும் 3 பாடல்களின் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மேலும் ஒரு பாடல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ‘காலண்டர்’ பாடலின் பாடல் வரிகள் (Lyrical) வீடியோ வைரலாகி வருகிறது.