2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளிடையே இன்று பலப்பரீட்சை நடக்கவுள்ளது. அதில், இந்தியா கோப்பையை வெல்ல வேண்டுமென்பதே 140 கோடி இந்திய மக்களின் பேரவாவாக உள்ளது. இந்நிலையில், இப்போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற வேண்டும் என உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளால் ரசிகர்கள் இந்திய வீரர்களின் புகைப்படங்களை வைத்து சிறப்பு யாகம் & பூஜைகள் செய்து மனமுருகி வேண்டி வருகின்றனர். இந்த வீடியோஸ் வைரலாகி வருகிறது.