ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்றோடு முடிவுக்கு வருகிறது. 5 போட்டிகளை கொண்ட தொடரை, 3க்கு 1 என்ற கணக்கில் இந்தியா ஏற்கெனவே கைப்பற்றி விட்டது. ஆகையால், இன்று மாலை 4.30 மணிக்கு கடைசி போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி ரசிகர்கள் இடையே பெரிய ஆர்வம் இல்லை என்றாலும் இந்திய அணி வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அதே நேரத்தில் ஜிம்பாப்வே அணியும் தொடரை இழந்தாலும், 2வது வெற்றிக்காக போராடுவார்கள் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும். ஜூலை 27ஆம் தேதி முதல் இலங்கை, இந்தியா இடையேயான தொடர் தொடங்கவுள்ளது.