ரூ.32,403 கோடி GST வரி ஏய்ப்பு புகார் குறித்து Infosys நிறுவனத்திற்கு அனுப்பிய நோட்டீஸை கர்நாடக அரசு திரும்பப் பெற்றுள்ளது. GST புலனாய்வு இயக்குநரகம் அனுப்பிய நோட்டீஸுக்கு உரிய பதிலளிக்க கர்நாடக அரசு Infosys நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. 2017-2022 காலக்கட்டத்தில் தனது வெளிநாட்டு கிளைகள் மூலம் பெற்ற சேவைகளுக்கு சுமார் ரூ.32,403 கோடி GST வரி செலுத்தாத குற்றச்சாட்டை Infosys நிறுவனம் மறுத்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.