கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவால் ஐடி நிறுவனங்களின் கூட்டமைப்பான NASSCOM அதிருப்தியில் உள்ளது. இதையடுத்து ஆந்திர அமைச்சரும் முதல்வர் சந்திரபாபுவின் மகனுமான நாரா லோகேஷ், ஐடி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். தடையில்லா மின்சாரம், கட்டுப்பாடுகளற்ற ஒப்பந்தம் ஆகியவை வழங்கப்படும் என்று அறிவித்து ஐடி நிறுவனங்களை ஆந்திர அரசு தன் பக்கம் இழுக்கிறது.