வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான இணையதளம் முடங்கியதால், ITR -ஐ தாக்கல் செய்ய முடியாமல், பலரும் புலம்பி வருகின்றனர். ஜூலை 31க்குள் ITR தாக்கல் செய்யவில்லை என்றால் ₹5000 வரை அபராதம் விதிக்கப்படும். இதை தவிர்க்க பலர் ITR தாக்கல் செய்து வரும் நிலையில், தற்போது இணையதளம் முடங்கியுள்ளது. இதனால், ITR தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.