ITR தாக்கல் செய்யும் போது கட்டாயம் E-Verify செய்ய வேண்டும். E-Verify செய்யாவிட்டால், உங்கள் ITR தாக்கல் செய்யப்பட்டதாக கருதப்படாது. ITசட்டம் 1961இன் கீழ், ITR தாக்கல் செய்யாதவர்களுக்கு பொருந்தக்கூடிய அனைத்து விளைவுகளையும் சந்திக்க நேரிடும். அதே நேரம், சரிபார்ப்பை ஏன் செய்யவில்லை என்பதை கோரிக்கை வைத்தால், காரணம் செல்லுபடியாகும் பட்சத்தில் E-Verify செய்ய மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.