ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜியோ தனது பயனாளர்களுக்கு 3 மாத ரீசார்ஜை இலவசமாக பெறுவதற்கு இந்த லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும் என்ற ஒரு செய்தி வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஜியோ, பயனாளர்களுக்கு எந்த இலவச ரீசார்ஜையும் வழங்கவில்லை. இந்த செய்தி முற்றிலும் தவறான தகவல், இதுபோன்ற செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.