சென்னை மாநகராட்சி நகர்ப்புற சுகாதார திட்டத்தில் காலி பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், தொற்றுநோய் நிபுணர் (1), மருத்துவ அதிகாரி (28), செவிலியர் (71) லேப் டெக்னீசியன் (33), பார்மசிஸ்ட் (8), எக்ஸ் ரே டெக்னீசியன் (5), ஆக்சிலரி நர்ஸ் (70), ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் (3), அக்கவுண்ட் அசிஸ்டெண்ட் (1) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை www.chennaicorporation.gov.in மாநகராட்சி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதற்கான சான்றிதழ்களை இணைத்து தபால் அல்லது நேரில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி “The Member Secretary, Chennai City Urban Health Mission, Public Health Department, Ripon buildings, Chennai- 600003” . ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி மாலை 5 மணி வரை அனுப்பலாம்.