கன்னட இயக்குனரான பிரசாந்த் நீல் கேஜிஎஃப் படங்களை தொடர்ந்து தெலுங்கில் பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்கினார். அதன் இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில் அடுத்ததாக நடிகர் அஜித் குமாரை வைத்து 2 படங்கள் இயக்கப் போவதாகவும் கேஜிஎஃப் 3ம் பாகத்தில் அஜித் இடம் பெறுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் தற்போது “விஷமுயற்சி” படத்தில் நடித்து முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.