சிறையில் உள்ள தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு, பிற கைதிகளைப்போல சம உரிமை வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு சிறை நிர்வாகத்துறை இயக்குநர் எழுதியுள்ள கடிதத்தில், “LGBTQ+ சிறைக் கைதிகளுக்கு பொருள்கள், சேவைகள் வழங்குவது மற்றும் கைதிகளைப் பார்வையிடுவது உள்பட அனைத்திலும் பாகுபாடு காட்டக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.