கர்நாடக முதல்வர் சித்தராமையா, நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தால் ஒதுக்கப்படும் நிலங்களில் மோசடி செய்ததாக பாஜகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதற்கு பதிலளித்த சித்தராமையா, ஓபிசி(OBC)பிரிவைச் சேர்ந்தவர், 2ஆவது முறையாக முதல்வராகி இருப்பதை கண்டு பொறாமைப்படுவதாகவும், இந்த பொய் புகார்கள் தன்னை அச்சப்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக முன்பே விசாரிக்க உத்தரவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.