பாரிஸ் ஒலிம்பிக்கின் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவுக்கான தனது முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து வெற்றி பெற்றுள்ளார். இன்று நடைபெற்ற குரூப் ஸ்டேஜில் அவர் மாலத்தீவைச் சேர்ந்த வீராங்கனை பாத்திமாவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே அபாரமாக விளையாடிய அவர், 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் பாத்திமாவை வீழ்த்தியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் அவர் நல்ல
தொடக்கத்தைப் பெற்றுள்ளார்.