பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளால் ஒட்டுமொத்த விளையாட்டு உலகமும் விழாக்கோலம் பூண்டுள்ளது. சர்வதேச வீரர்கள் மகிழ்ச்சியில் திளைத்துவரும் இந்நேரத்தில், பாலஸ்தீனத்தின் முதல் ஒலிம்பிக்ஸ் பங்கேற்பாளரும், தடகள வீரருமான அபு மராஹீல் வதைவலி மிகுந்த மரணத்தை எய்தியுள்ளார். சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அவர் நுசிராத் முகாமில் இருந்து மேல் சிகிச்சைக்காக ரஃபா எல்லையை கடக்க முயன்றபோது உயிரிழந்துள்ளார்.