பாரிஸ் ஒலிம்பிக்ஸின் சாகச விளையாட்டான அலைச்சறுக்குப் போட்டிகள் நடைபெறவுள்ள ‘டீஹுபோ’ கடற்பகுதி மிக ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. அலைச்சறுக்கு வீரர்களால் ‘த எண்ட் ஆஃப் தி ரோட்’ என அழைக்கப்படும். அங்கு உலகின் ஆபத்தான அலைகள் (20-25 அடி மேலாக) எழும். அனுபவமிக்க வீரர்கள்கூட மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாடும் இங்கே வெற்றிக்காக தங்கள் உயிரைப் பணயம் வைக்க இளம் வீரர்கள் பலரும் தயாராகி வருகின்றனர்.