பெங்களூருவில் தன்னுடைய தனிமையை போக்குவதற்கு வார இறுதி நாட்களில் ஆட்டோ ஓட்டி வருகிறார் 35 வயதான மைக்ரோசாப்ட் பொறியாளர். சமீபத்தில் இவருடைய ஆட்டோவில் வெங்கடேஷ் குப்தா என்பவர் பயணம் செய்துள்ளார். அப்பொழுது ஓட்டுநர் மைக்ரோசாப்ட் டீ-சர்ட் அணிந்திருந்ததை கண்டு அவரிடம் விசாரித்துள்ளார்.
அப்பொழுதுதான் இந்த விஷயம் தெரிய வந்தது. அதாவது அந்த நபர் தன்னுடைய தனிமையை போக்குவதற்காக வார இறுதி நாட்களில் ஆட்டோ ஓட்டுவதாக கூறியுள்ளார். இதனை வெங்கடேஷ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.