பீகாரில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை தருவதாக வாட்ஸ்அப் மூலம் செய்தி வெளியிட்டு 100 இளம் பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொல்லை அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மாநிலத்தின் முஷாபூர் அருகே பெண்களை பெல்டால் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக 9 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த கும்பலிடம் சிக்கிக்கொண்டு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோவால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முஷாபூர் அருகே அஹியார்பூர் என்ற இடத்தில பெண்களை அடைத்துவைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.