இந்தியாவின் ரம்மியமான பனிப் பிரதேசங்களில் ஒன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர். தற்போது அங்கு வெயிலின் தாக்கம் அதீத அளவுக்கு உயர்ந்துள்ளது. நேற்று அதிகபட்ச வெப்பநிலை 35.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது 1999- க்குப் பிறகு, அதாவது 25 ஆண்டுகளுக்கு பின் பதிவான மிக உயர்ந்த வெப்பமாகும். இந்தாண்டின் சராசரி வெப்பநிலையை விட தற்போது 6 டிகிரி செல்சியஸ் அதிகம் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளனர்.