வருங்கால வைப்பு நிதிக்கான உச்சவரம்பை மத்திய அரசு வரும் பட்ஜெட்டில் உயர்த்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ₹6,500ஆக இருந்த மாத உச்சவரம்பு, 2014ஆம் ஆண்டு ₹15,000ஆக உயர்த்தப்பட்டது. 10 ஆண்டுகளாக அது மறு வரையறை செய்யப்படாமல் இருப்பதால் இந்த முறை உயர்த்தப்பட அதிக வாய்ப்புள்ளது. இதன்மூலம், ஊழியர்கள் அதிக தொகையை வருங்கால வைப்பு நிதியில் சேமிக்க முடியும்.