PF வட்டி விகிதம் 8.15%-லிருந்து 8.25% ஆக உயர்ந்துள்ளது. ஆனால் 2023-24 நிதியாண்டுக்கான வட்டியை அரசு இன்னும் வழங்கவில்லை. இந்நிலையில் வட்டிப்பணத்தை பயனாளிகள் கணக்கில் டெபாசிட் செய்யும் செயல்முறை நடந்து வருவதாகவும், விரைவில் தொகை வரவு வைக்கப்படும் எனவும் EPFO நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் ஜூலை 23க்கு பிறகு வரவு வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.