ஜூலை 31க்குள் விவரங்களை பதிவு செய்யாத விவசாயிகளுக்கு PM கிஷான் நிதி கிடைக்காது என மத்திய அரசு கூறியுள்ளது. இந்த திட்டத்தில் ஆண்டுதோறும் தலா ₹6000ஐ, 3 தவணைகளாக மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில், அக்ரிஸ்டாக் திட்டத்தின் கீழ் பட்டா உள்ளிட்ட விவரங்கள், e-KYC பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள அரசு, விவரங்களை பதிவு செய்யாதவர்களுக்கு 18ஆவது தவணை ₹2000 கிடைக்காது என்றும் எச்சரித்துள்ளது.