ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை prank செய்து வீடியோக்கள் வெளியிடும் விளாடிமிர் குஸ்நெட்சோவ் மற்றும் அலெக்ஸி ஸ்டோலியோரோவ் ஆகியோருக்கு ரஷ்ய நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. அமைதி மற்றும் நட்பு ஆகியவற்றை உயர்த்தி பிடிப்பவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. முன்னாள் உக்ரைன் அதிபர் பேசுவது போலவும் பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலாளரை prank செய்தும் வீடியோவை இவர்கள் சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.