க்யூஆர் குறியீட்டோடு ரயில் டிக்கெட்டுகளை வாங்கும் வாய்ப்பை ரயில்வே துறையானது வழங்கியுள்ளது. டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியாக ரயில்வே அமைச்சகம் பயணிகளுக்கு இந்த வசதியானது வழங்கபட்டுள்ளது. வழக்கமான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு இந்த QR குறியீட்டைப் பயன்படுத்தலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் உள்ள பல ரயில் நிலையங்களில் இந்த சேவையானது ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை Scan செய்யும் போது தகவல்கள் கிடைக்கும்.