கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் பலியாகியுள்ள நிலையில், சட்டப்பேரவையில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளார். சபாநாயகர் அப்பாவு முன்பு, ‘RESIGN STALIN’ என்ற பதாகையை ஏந்தியபடி, அதிமுக உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.
இதனால் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து குண்டுக்கட்டாக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் சட்டப்பேரவை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.