மத்திய அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணையலாம் என்ற மத்திய அரசின் அனுமதிக்கு மதுரை எம்.பி., சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். “சாவர்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்றத்தை திறந்து, அரசு ஊழியர்களை RSS க்கு அனுப்பிவைக்கும் வேலையை துவக்கியுள்ளது மோடி அரசு” என்று அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக மத்திய அரசு ஊழியர்கள் RSSஇல் இணைய தடை இருந்தது.