தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபடக் கூடாது என மாணவர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு ஆகியவை மாணவர்களுக்கு மிக முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், தவறான பழக்க வழக்கங்களில் நண்பர்கள் ஈடுபட்டால், அவர்களையும் திருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், Say No To Temporary Pleasures, Say No To Drugs எனக் கூறி மாணவர்களையும் அவர் உறுதிமொழியேற்கச் செய்தார்