நாட்டின் முதன்மையான வங்கியான sbi வங்கி புதிதாக 400 கிளைகள் திறக்கப்படும் என சமீபத்தில் அறிவித்தது. இதனால் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்பு உருவாகும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக புதிய கிளைக்கு தேவையான அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் ஓய்வு பெறுவது போன்றவற்றால் 6000 முதல் 8000 வேலை வாய்ப்புகள் உருவாக்கலாம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.